Tuesday, February 2, 2016

போட்டு விடுவோம்

நான்: பாஸ், கொஞ்சம் மெதுவாவே போலாமே
ஓலா ஓட்டுனர்: 18 வருஷம் experience பாஸ். ஒன்னும் பிரச்னை இல்ல
நா: நான் கூடதான் பாஸ் முப்பத்தி நாலு வருஷமா நடக்கறேன். ஆனா நேத்து பாருங்க கால் தடுக்கி கீழ விழுந்துட்டேன்
ஓ.ஓ: நாப்பது-ல போனா போதுமா பாஸ்?

Wednesday, August 20, 2014

அ(ம்ருதா)ஞ்சான்

ஏழாம் அறிவு, மாற்றான் வரிசையில் ஒரு மொக்கை படமாக இருக்குமென்று எதிர் பார்த்து தெனாவெட்டாக போனவனுக்கு ஒரு suprise. ஆதவனையும் சேர்த்து பின்னுக்கு தள்ளி ஒரு மரண மொக்கையை கொடுத்திருக்கிறார் லிங்குசாமி.

ஒப்பனிங்ல சூர்யா "ஓடிபோய் புடிசிடுவோம்ல"-னு பஞ்ச் டயலாக் பேசிகிட்டே மும்பை ரயில் நிலையத்துல crutch-ஓட  வந்து இறங்கறார் (துப்பாக்கி-ல விஜய் இறங்கின அதே பிளாட்பார்ம்). எல்லா ஜல்சா இடத்துக்கும் போய்  அவரோட அண்ணனை தேடுறாரு.  கூடவே laptop -லயும் என்னவோ தேடுறாரு.

போற இடத்துல எல்லாம் "ராஜு பாய் ... ராஜு பாய்"-னு புல் பில்ட்-அப் ஏத்துறாங்க. ராஜு பாய்  எங்களுக்கு இது பண்ணி இருக்காரு ... ராஜு பாய் எங்களுக்கு அது பண்ணி இருக்காரு-னு "வேலு பாயும், விஷ்வா பாயும்" தோக்கற அளவுக்கு பாயிண்ட் ஏத்தறாங்க. "ராஜு பாய் போட்டோ இருக்கு, இந்த laptop -அ நாங்க திருட மாட்டோம்"-னு இன்னோரு குரூப் தல Red-ஏ Dead ஆகுற அளவுக்கு வாக்குமூலம் குடுக்கறாங்க.

சந்திக்கிற ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க பங்குக்கு பாயிண்ட் ஏத்த, ராஜு பாய் "Bang Bang"-னு  Neymar கட்டிங்கோட entry ஆவுறார் அண்ணன் சூர்யா. அப்புறம் என்ன, பாட்டு முடியருதுக்குள்ள நாப்பத்தஞ்சு பேர, நூத்தி எழுவத்திஏழு தடவை சுட்டு சாகடிக்கிறாரு.

ராஜு, சந்துரு ரெண்டு பேரும் வேகமா வளர்ந்து வரும் Dons. ஆனா என்ன பிசினஸ் பண்றாங்க, எப்படி பெரிய ஆள் ஆனாங்க-னு  பெருசா ஒன்னும் சொல்லல. அதே மாதிரி அந்த ஊர் மக்களுக்கு என்ன பண்ணினாங்கனும் தெரில. சொன்னா மட்டும் என்ன பெருசா ஆக போகுதுன்னு Director நேனைசிட்டார் போல. இவங்க வளர்ச்சி புடிக்காத வில்லன் கூப்பிட்டு warn பண்ண, இவங்க டென்ஷன் ஆகி வில்லனை கடத்தி வந்து பஞ்ச் டயலாக் பேசி வெறுப்பேத்த, கடுப்பான வில்லன் சந்துருவை அவங்க ஆளை வெச்சே போட்டு தள்றார். ராஜுவையும் அவங்க ஆளே பாலத்துல வெச்சு சுட ராஜு (சூர்யா) தண்ணிக்குள்ள விழுந்திடறார். அவர் பொழச்சி வராரா, கிருஷ்ணா தான் ராஜுவா, பர்தாக்குள்ள இருக்கறது சமந்தாவானு நீங்க படத்த பாத்து தெரிஞ்சிக்கோங்க.

படத்துல பாராட்ட பட வேண்டிய ஒரு விஷயம் சூர்யா போட்டிருக்கிற effort. மொக்கையா தோத்த England test match - ல Dhoni 82 அடிச்ச மாதிரி. மத்தபடி ஒரு 100 தடவை chain -அ சுத்தி விடறார், 500 தடவை Tooth-Pick -அ வாய்ல சுழட்டறார், மாட்டினவங்களை எல்லாம் போட்டு தள்றார்.

சமந்தா பத்தி சொல்ல ஒன்னும் இல்ல. தமிழ்ல மார்க்கெட் புடிச்சே ஆகணும்னு முடிவு பண்ணிட்டாங்க போல. சந்துரு-வா வித்யுத் ஜம்வால் ... இப்போதைக்கு Resume-ல துப்பாக்கி வரைக்குமே update பண்ணலாம். வில்லனா மனோஜ் பாஜ்பாய், வழக்கம் போல வித்யாசமா try பண்ணி, ஆனா வழக்கம் போலவே இருக்கு. பரோட்டா சூரி - இந்த படத்துல 'சூரி' வரும் கொஞ்ச நேரம் கலகலக்க வைக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இப்போ Virat Kohli ராசி போல. கெடைக்கிற சான்ஸ் எல்லாம் duck-out ஆகிட்டே இருக்கார். ரீ- ரெகார்டிங் எல்லாம் ரொம்ப சத்தம். சந்தோஷ் சிவன் வழக்கம் போல தாறு மாறு.

எல்லாத்தையும் நல்லா வெச்சிக்கிட்டு எப்படி சொதப்பலம்னு லிங்குசாமிகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம். படம் Promo - ல பேசுன பேச்சை Script - ல காமிச்சு இருக்கலாம். 'பேங் பேங்'-னு சொல்லி சும்மா போங்கடிதிருக்கிறார்.

இண்டர்வல்-க்கு முன்னாடி ஒருத்தர் சொல்கிறார்: "டேய் Gate -அ இழுத்து மூடுடா ... ஒரு பய வெளியே போக கூடாது". வேற வழி இல்லாம முழு படமும் பாக்க வேண்டியதா போச்சு !!!